டெல்டா பாசன விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், “மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு மட்டும் நீர் திறந்தால் விவசாயிகளுக்கு எந்தவிதப் பயனும் இல்லை.
குருவை மற்றும் சம்பா சாகுபடி பணிகள் முழுமையடைய 120 நாட்களுக்குத் தொடர்ந்து நீர் திறக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
குறைந்த நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறக்கப்படுவதால் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்படுவதாகவும், விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, தமிழக அரசு டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில், மேட்டூர் அணையில் இருந்து 120 நாட்களுக்குக் குறையாமல் பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.