“தமிழக கவர்னராக கிரண் ரெட்டி?”: புதிய ஆளுநராக ஆந்திர முன்னாள் முதல்வர் நியமிக்கப்பட வாய்ப்பு – டெல்லி வட்டாரத் தகவல்கள் பரபரப்பு!

தமிழகத்தின் புதிய ஆளுநராக (கவர்னர்) ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு மற்றும் டெல்லி அரசியல் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள தகவல்களின்படி, தமிழகத்தில் ஆளுநர் மாற்றம் குறித்த ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த உயரிய பொறுப்பிற்கு ஆந்திர அரசியலில் நீண்ட அனுபவமும், முன்னாள் முதலமைச்சருமான கிரண்குமார் ரெட்டியின் பெயர் முதன்மையாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.

தென்னிந்திய அரசியலை நன்கறிந்த அனுபவமிக்கத் தலைவரைத் தமிழக ஆளுநராக நியமிப்பது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் அரசியல் சூழலில் இந்த ஆளுநர் மாற்றப் பேச்சு வார்த்தைகள் பெரும் எதிர்ப்பார்ப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளன.

Leave a Comment