தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தரும் முக்கியச் சுற்றுலாத் தளமான உதகை படகு இல்லத்தை தனியாரிடம் ஒப்படைக்கத் த.வெ.க. அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
நீலகிரி மாவட்டத்தின் மிக முக்கியமான அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பிரதான மையமாகவும் விளங்கக்கூடிய இந்த உதகை படகு இல்லத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு உதகை நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானத்தை அள்ளித் தரும் ஒரு பொதுத்துறைச் சொத்தை தனியாருக்குத் தாரை வார்ப்பது அரசுக்கு நிதி இழப்பையும், அங்குள்ள ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புப் பாதிப்பையும் ஏற்படுத்தும் என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் உதகை படகு இல்லத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கத் த.வெ.க. அரசு எடுத்து வரும் இந்த முயற்சிக்கு உள்ளூர் மக்களும், சமூக ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருவதால், இந்த விவகாரம் நீலகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.