“மீண்டும் வெற்றிக்கு அழைத்து செல்வேன்!”: திமுக தலைவராக 9ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின் – 110 மாவட்டங்களாகப் பிரித்து அதிரடி அறிவிப்பு!

திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

2018-ம் ஆண்டு இதே நாளில் திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தற்போது 9-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறார்.

இதைக் குறிப்பிட்ட அவர், கழகத்தில் கொண்டுவரப்படும் மறுசீரமைப்புப் பணிகளுக்குத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் உறுதுணையாக நிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கட்சியின் கட்டமைப்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், திமுகவில் உட்கட்சி ரீதியாக 110 மாவட்டங்களைப் பிரித்து புதிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

தேர்தல் களம் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தித் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் கழக உடன்பிறப்புகளிடையே புதிய உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Leave a Comment