முதலமைச்சர் விஜய் பிரதமராக வாய்ப்புள்ளதாகத் தவெகவினர் பேசி வருவது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது காரசாரமான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை யாராலும் சிந்தித்துக் கூட பார்க்க முடியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், “முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய், முதலில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அந்த வேலையை முழுமையாகவும் சரியாகவும் செய்து முடிக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.
தவெக தொண்டர்களின் பேச்சுக்கும் விஜய் பிரதமர் ஆவதற்கான வாய்ப்புகள் குறித்த விவாதங்களுக்கும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்துள்ள இந்த அதிரடி பதில், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.