“பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு!”: 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு – பால் உற்பத்தியாளர்கள் வரவேற்பு!

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாகச் சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரவை மாடுகளுக்கான தீவனம் மற்றும் இதர இடுபொருட்களின் விலை உயர்வைக் சுட்டிக்காட்டி, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனப் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவர்களின் கோரிக்கையினைப் பரிசீலனை செய்த அரசு, கொள்முதல் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளது. இதன்படி, இதுவரை லிட்டருக்கு ரூ.41 ஆக இருந்த பால் கொள்முதல் விலை, தற்போது ரூ.3 உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.44 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட இந்த முக்கிய அறிவிப்பு, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Comment