காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் தாரகை கத்பர்ட் சட்டப்பேரவையில் திடீரென எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், தாரகை கத்பர்ட் ஆளுங்கட்சிப் பக்கமிருக்க வேண்டிய தனது இடத்தை விட்டுவிட்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்.
ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் முக்கியக் கட்சியான காங்கிரஸின் சட்டமன்றக் குழு தலைவர் எடுத்துள்ள இந்த திடீர் நகர்வு, அரசியல் வட்டாரத்தில் பலத்த கவனத்தையும் பெரிய எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.
பேரவை நிகழ்வின் போது நடந்த இந்த எதிர்பாராத சம்பவம், அவைக்குள் இருந்த உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான அரசியல் உறவில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.