எடப்பாடி தொகுதியில் ரூ.3 கோடியில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்காகத் தொடங்கப்பட்ட பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பேரவையில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ், விளையாட்டு வீரர்கள் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் பயன்படுத்தும் வகையில் சேமி செட்டையும் (Semi-shed), நவீன டிரேக்கையும் (Track) உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்காகவே பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எடப்பாடி தொகுதி உட்பட மொத்தம் 60 தொகுதிகளில் ஆரம்பிக்கப்பட்ட மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் அனைத்தும் புதிய வடிவமைப்புக்காகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அதிநவீன வசதிகளுடன் அதற்கான பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் விளக்கமளித்துள்ளார்.
எடப்பாடி தொகுதி விளையாட்டு அரங்கம் தொடர்பான கேள்வியும், அதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அளித்த விளக்கமும் சட்டப்பேரவை நிகழ்வில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.