தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் விளையாட்டு வீரர்களுக்கான உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், மாநிலத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் தற்போது வரை 2,800 நபர்கள் மட்டுமே தங்கிப் படிக்கும் வசதி இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையைப் பெருமளவில் உயர்த்தும் நோக்கில், மொத்தம் 36 ஆயிரம் நபர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே தங்கிப் படிக்கும் வகையில் அதிநவீன விளையாட்டு விடுதிகள் விரிவாக அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
கிராமப்புற மற்றும் மாவட்ட அளவிலான இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் சொந்த மாவட்டங்களிலேயே தங்கிப் பயிலும் வசதியை ஏற்படுத்தித் தரும் இந்த மெகா திட்டம், விளையாட்டுத் துறை ஆர்வலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.