சட்டப்பேரவையில் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் விக்னேஷ், மதுப்பழக்கத்தால் தன் குடும்பம் சந்தித்த துயரங்கள் குறித்து மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகப் உரையாற்றினார்.
அவையில் பேசிய அவர், “மதுவால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று; இதனால் நானும் என் தாயும் சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளோம்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும் தனது சிறுவயது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்று எனது சிறுவயதில் நினைத்தேன்” என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
மதுபானப் பழக்கத்தால் குடும்பங்கள் சந்திக்கும் சீரழிவுகளைத் தனது சொந்த வாழ்க்கைப் பின்னணியோடு ஒப்பிட்டு அமைச்சர் விக்னேஷ் சட்டமன்றத்தில் வெளிப்படுத்திய இந்த நெகிழ்ச்சியான பேச்சு, பேரவை உறுப்பினர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கவனத்தையும் அனுதாபத்தையும் ஈர்த்துள்ளது.