தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதியன்று பிரிட்டன் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும், பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கவும் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, வருகிற 4-ஆம் தேதியன்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தைவான் நாட்டிற்குப் பயணம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 10-ஆம் தேதி லண்டன் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொண்டு சர்வதேச தொழில் நிறுவனங்களின் தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசிக்கத் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தை முன்னணி தொழில் மையமாக மாற்றும் இலக்கோடு மேற்கொள்ளப்படும் இந்த வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் முதலீட்டு ஈர்ப்பு முயற்சிகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.