“சர்க்கரை கையிருப்பு வரம்பு குறைப்பு!”: விலை உயர்வைக் கட்டுப்படுத்த வியாபாரிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சந்தையில் சர்க்கரை விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், பதுக்கலைத் தடுக்கும் வகையிலும் வியாபாரிகளுக்கான சர்க்கரை கையிருப்பு வரம்பை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.

இதன்படி, வரும் 15-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரை வியாபாரிகள் வைத்திருக்கக் கூடிய சர்க்கரை கையிருப்பு வரம்பு 4 ஆயிரம் குவிண்டாலில் இருந்து 2 ஆயிரம் குவிண்டாலாகக் குறைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், சந்தையில் சர்க்கரை தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கவும், சில்லறை விற்பனையில் விலை செயற்கையாக உயர்த்தப்படுவதைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் சர்க்கரையைப் பதுக்கி வைக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சர்க்கரையின் விலையைக் கட்டுக்குள் கொண்டு வந்து சாமானிய மக்களுக்கு நியாயமான விலையில் சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, நுகர்வோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment