“பிரதமர் வேட்பாளர் விஜய்!”: ராகுல் காந்தி கையைப் பிடித்து உட்கார வைப்பார் – தவெக எம்.எல்.ஏ கனிமொழி அதிரடி கணிப்பு!

வருகின்ற 2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகத் தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் தான் முன்னிறுத்தப்படுவார் எனத் தவெக எம்.எல்.ஏ கனிமொழி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அரசியலில் விஜய் அவர்களின் எழுச்சி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறக்கூடும் எனக் குறிப்பிட்டார். “2029-ல் பிரதமர் வேட்பாளர் தவெக தலைவர் முதல்வர் விஜய் தான்; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் அவரை அன்போடு கையைப் பிடித்து அழைத்துச் சென்று பிரதமர் நாற்காலியில் உட்கார வைப்பார்” என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தேசிய அளவிலான அரசியல் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கூட்டணிகள் குறித்துத் தவெக எம்.எல்.ஏ கனிமொழி வெளியிட்டுள்ள இந்தக் கருத்து, தமிழகம் தாண்டியும் தேசிய அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment