பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவசக் காலணிகளைக் குப்பையில் வீசியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் பரமசிவம் (வயது 57) பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்களின் நலனுக்காக அரசு நிதி ஒதுக்கி வழங்கும் இலவசச் சீருடைகள் மற்றும் காலணிகள் போன்ற நலத்திட்டப் பொருட்களைச் சரிவர விநியோகிக்காமல், குப்பையில் எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து விசாரணை நடத்திய முதன்மைப் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகம், பொறுப்புத் தலைமை ஆசிரியர் பரமசிவத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
அரசுப் பொருட்களை மதித்து மாணவர்களுக்குச் சேர்ப்பதை விட்டுவிட்டு, குப்பையில் வீசி வீணடித்த தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, கல்வித்துறை வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.