“ரூ.3.78 கோடியில் டெண்டர் முடிவு!”: முதல்வர் அலுவலகப் பணிகளுக்கு நிதி ஆதாஸ் – ‘ராசி பில்டர்ஸ்’ நிறுவனத்தின் குறைந்தப்பட்ச ஒப்படைப்பு!

முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலக உள்கட்டமைப்பு பணிகளுக்கான ரூ.5.54 கோடி மதிப்பிலான 3 முக்கியமான டெண்டர்களும் ‘ராசி பில்டர்ஸ்’ என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.

அரசு நிர்ணயித்த உத்தேசத் தொகையான ரூ.5.54 கோடியை விட சுமார் 32 சதவீதம் குறைவாக, வெறும் ரூ.3.78 கோடி மதிப்பீட்டிலேயே இப்பணிகள் அனைத்தையும் தரமாகவும் விரைவாகவும் முடித்துத் தருவதாக அந்நிறுவனம் ஒப்பந்தப் புள்ளிகளைச் சமர்ப்பித்து முன்வந்துள்ளது.

இதன் மூலம் அரசுப் பொக்கிஷத்திற்கு பல லட்சம் ரூபாய் நிதி சேமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சரின் புதிய அலுவலகப் பணிகளை குறைந்த செலவில் விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ள இந்த டெண்டர் ஒதுக்கீடு, அரசு நிர்வாக வட்டாரங்களிலும் பொருளாதாரக் கண்காணிப்பாளர்கள் மத்தியிலும் நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment