“தமிழக முதல்வர் ‘வாழும் காமராஜர்’!”: நீலாங்கரையில் வசிக்கும் விஜய் பெருமைக்குரியவர் – தவெக எம்.எல்.ஏ செல்வம் புகழாரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரான செல்வம், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயை வெகுவாகப் புகழ்ந்து பேசி அவையின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சட்டமன்ற விவாதத்தின் போது உரையாற்றிய அவர், முதலமைச்சரின் எளிமையான அணுகுமுறையையும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளையும் பாராட்டிப் பேசினார். “நீலாங்கரையில் வசிக்கும் முதலமைச்சர் விஜய் ஒரு ‘வாழும் காமராஜர்'” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், கல்வி மற்றும் மக்கள் சேவையில் பெருந்தலைவர் காமராஜரின் வழியைப் பின்பற்றி முதல்வர் ஆற்றி வரும் பணிகள் பாராட்டுக்குரியவை எனச் சுட்டிக்காட்டினார்.

பெருந்தலைவர் காமராஜருடன் முதலமைச்சர் விஜயை ஒப்பிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ செல்வம் பேசியுள்ள இந்தக் கருத்துக்கள், சட்டமன்றத்தில் உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதோடு, அரசியல் களத்திலும் பரவலான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment