சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு வரும் திங்கள்கிழமை விரிவான பதிலளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், பதிலளிக்கும் நேரத்தில் எதிர்க்கட்சியினர் யாரும் வெளிநடப்பு செய்யக்கூடாது என்ற சுவாரசியமான நிபந்தனையை முன்வைத்துள்ளார்.
பேரவையில் காரசாரமாக நடைபெற்ற விவாதத்தின் போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், உறுப்பினர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் திங்களன்று முறையான பதில் அளிக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், சபாநாயகரைப் பார்த்து, “உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு சத்தியத்தைக் கேட்டுக்கொள்கிறேன்; ‘அவர்கள் யாரும் எந்திரிச்சு ஓடக்கூடாது'” என்று கன்டிஷனாகக் கூறினார்.
அரசு அளிக்கும் விரிவான பதில்களை முழுமையாகக் கேட்காமல் எதிர்க்கட்சியினர் பாதியிலேயே வெளிநடப்பு செய்வதைத் தவிர்க்கும் வகையில் அவர் இவ்வாறாகக் குறிப்பிட்டிருந்தார்.
அரசு மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கத் தயார் என்பதைத் தெள்ளத்தெளிவாக உணர்த்திய முதலமைச்சர் விஜயின் இந்த நகைச்சுவையான மற்றும் சுடச்சுட பேச்சு, சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, இணையதளங்களிலும் அரசியல் களம் முழுவதிலும் வைரலாகிப் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.