‘தலைவர் 173’ டிராப்? சியான் விக்ரமிடம் தஞ்சம் புகும் சிபி சக்கரவர்த்தி!

கோலிவுட் திரையுலகில் தற்போது ஹாட் டாப்பிக்காக வலம் வரும் ஒரு முக்கியமான சினிமா அப்டேட் என்னவென்றால், ‘டான்’ திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவிருந்த ‘தலைவர் 173’ திரைப்படம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது என்பதுதான். உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) தயாரிப்பில், ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், ஆரம்பக்கட்ட கதை விவாதங்களுக்குப் பிறகு தற்காலிகமாக டிராப் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி சொன்ன ஒன்லைன் கதை முதலில் ரஜினி மற்றும் கமல் இருவருக்குமே பிடித்திருந்தாலும், முழு திரைக்கதையாக டெவலப் செய்த பிறகு சில விஷயங்கள் ஒத்து வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த அதீத கற்பனையான ஹை-ஃபை (Hi-Fi) சப்ஜெக்ட்டிற்கு அதிகப்படியான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் தேவைப்படும் என்பதால், ரஜினிகாந்த் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘தர்மன்’ திரைப்படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், ‘தலைவர் 173’ படத்திற்காகத் தான் மிகவும் செதுக்கி வைத்திருந்த அந்த வலிமையான மாஸ் கதையை வீணாக்க விரும்பாத சிபி சக்கரவர்த்தி, தற்போது அதனை நடிகர் சியான் விக்ரமிடம் கொண்டு சென்றுள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விக்ரமின் அசாத்திய நடிப்புத் திறனுக்கும், மாஸ் இமேஜுக்கும் இந்தக் கதைக்களம் மிகக் கச்சிதமாகப் பொருந்தும் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

‘சியான் 64’ எதிர்பார்ப்பு:

ஏற்கனவே சியான் விக்ரம் தனது 64-வது திரைப்படத்திற்காக (‘சியான் 64′) ’96’ மற்றும் ‘மெய்யழகன்’ புகழ் இயக்குனர் பிரேம் குமாருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் அதனைத் தயாரிப்பதாக இருந்தது. எனினும், தற்போதைய புதிய சூழலில் சிபி சக்கரவர்த்தியின் இந்தக் கதையும் விக்ரமிற்குப் பிடிக்கும் பட்சத்தில், இந்த புதிய கூட்டணி உறுதியானால் அது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

முன்னதாக, சிபி சக்கரவர்த்தி ‘தலைவர் 173’ படத்திற்காகத் திரைக்கதை அமைத்த போது, அதில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை நடிக்க வைக்கத் திட்டமிட்டு அவரிடம் ஓகே வாங்கியிருந்தார் என்ற சுவாரசியமான தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஒருவேளை விக்ரம் இந்தக் கதைக்குச் சம்மதித்தால், அதே வில்லன் கூட்டணி இதிலும் தொடருமா அல்லது வேறு ஏதேனும் அதிரடி மாற்றங்கள் நிகழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்த மெகா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பற்றிய விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘டான்’ போன்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த இளம் இயக்குனருடன், நடிப்பின் நாயகன் சியான் விக்ரம் கைகோர்த்தால் கோலிவுட்டில் அது ஒரு மரண மாஸ் கமர்சியல் கூட்டணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

Leave a Comment