தனியார் பள்ளிகளிடம் பணம் வசூல்: முன்னாள் அமைச்சர் மகேஷ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு!

தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் தர உயர்வு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, திமுக ஆட்சிக் காலத்தில் பெருந்தொகையை வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்துள்ளது.

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி வழங்குவதற்காகத் தரகர்கள் மூலம் பல கோடிகளைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் தீவிர முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையின் முடிவில் பெறப்பட்ட முதன்மைச் சான்றுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனை ஆவணங்களின் அடிப்படையில், அவர் மீது இந்த அதிரடி நடவடிக்கை பாயந்துள்ளது. ஊழல் தடுப்புத் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் பதியப்பட்டுள்ள இந்த வழக்கு, வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தகட்ட சட்டப் நடவடிக்கைகளை நோக்கி நகர்ந்துள்ளது.

ஏற்கனவே சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவருக்குத் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனைகளை நடத்தி வந்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அவருக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மீது பதியப்பட்டுள்ள இந்த ஊழல் வழக்கு தொடர்பான செய்தி, தமிழக அரசியல் களம் மற்றும் கல்வித் துறை வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment