மத்திய அரசின் புதிய அறிவிப்பின்படி, தனிநபர்கள் தங்களுக்குள் மேற்கொள்கின்ற சாதாரண டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு எவ்விதக் கட்டணமும் வசூலிக்கப்படாது.
இருப்பினும், ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு மற்றும் எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிகப் பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளுக்குக் ரூ.5 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.2,000-க்கு மேற்பட்ட பிற வர்த்தக ரீதியிலான UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதக் கட்டணமும், அதிகபட்ச வர்த்தகக் கட்டணமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.300 வரை வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக மாறியுள்ள சூழலில், வணிக ரீதியிலான UPI பயன்பாடுகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையேயும் வணிகர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.