பகுத்தறிவுச் சுடர் தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்: தந்தை பெரியார் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு!

தமிழர் தலைமுறை தலைநிமிர்ந்து வாழ பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்குப் புரட்சி வணக்கம் செலுத்தி வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல தலைமுறைகள் ஆதிக்கத்திற்குப் பணிந்து கிடந்த சூழலில், ஒரு தலைமுறை பெரியார் நிகழ்த்திய அசாத்தியமான சமூகப் புரட்சியைக் கண்டது.

அதைத் தொடர்ந்து வந்த பல தலைமுறைகள் அந்தப் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட மாபெரும் சமூக மாற்றங்களைக் கண்டு வருகின்றன. இருப்பினும், சமூகத்தில் நிலவும் ஆதிக்கம் இன்னும் முற்றாக அகலவில்லை. அதனைத் துல்லியமாக அடையாளம் காண வேண்டியது வரும் தலைமுறைகளின் முக்கிய பொறுப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “வெளிச்சமற்ற இடம் வெறும் இருள்; ஆனால் கேள்விகளற்ற சமூகம் அதைவிடப் பே இருள் ஆகும். ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்ற பகுத்தறிவுக் கேள்விகள் சமூகத்தில் உயிரோடு இருக்கும் வரை, இருள் நம்மை ஒருபோதும் அண்டாது. தந்தை பெரியார் ஏற்றிய அந்தப் பகுத்தறிவுச் சுடர், இனிவரும் தலைமுறைகளையும் கடந்து தொடர்ந்து ஒளிரட்டும்” என்று மிகவும் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாகக் கொண்டாடப்படும் வேளையில், பகுத்தறிவு மற்றும் சமூக நீதி சிந்தனைகளை முன்வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி, சமூக வலைத்தளங்களிலும் அரசியல் இயக்கங்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

Leave a Comment