பாரம்பரியம் மாறாமல் மீண்ட மண்டபம்: வீர வசந்தராயர் மண்டபம் ரூ.38 கோடியில் புதுப்பிப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தில் கடுமையாகச் சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீர வசந்தராயர் மண்டபம், பழமையும் பாரம்பரியக் கட்டிடக்கலைத் தன்மையும் சற்றும் மாறாமல் சுமார் ரூ.38 கோடி செலவில் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

தொன்மை மாறாத வகையில் பழங்காலக் கட்டுமான முறைகளைப் பின்பற்றி, சேதமடைந்த கருங்கல் தூண்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானப் பகுதிகளும் மிகத் துல்லியமாக மீட்டெடுக்கப்பட்டு, இந்த மண்டபம் மீண்டும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

கோவிலின் வரவிருக்கும் திருக்குடமுழுக்கு நன்னாளிற்கு முன்பாகவே இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டபம் சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சேதமடைந்த பாரம்பரியச் சின்னங்களை அதன்கோட்பாடுகள் சிதையாமல் மீட்டெடுத்த இந்த முயற்சி, வரலாற்று ஆய்வாளர்கள், ஆன்மீக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment