பிரதமர் நரேந்திர மோடிக்குத் பிறந்தநாள் வாழ்த்து: ஸ்டாலின், இபிஎஸ், ராகுல் வாழ்த்து செய்தி!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் மோடி அவர்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு இந்தியாவின் முன்னேற்றத்தையும் செழிப்பையும் தொடர்ந்து வலுப்படுத்துகின்றன” என்று அவருடைய பணியைப் பாராட்டியுள்ளார்.

மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி ஜி, உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அமைய வாழ்த்துகிறேன்” எனக் கூறித் தனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

பல்வேறு அரசியல் கருத்தியல் வேறுபாடுகள் மற்றும் கள அரசியலில் காரசாரமான விவாதங்கள் நிலவி வரும் போதிலும், இந்தியப் பிரதமரின் பிறந்தநாளையொட்டி அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பண்பாடு, அரசியல் களத்தில் பெரும் வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது.

Leave a Comment