திமுக உடன் வருவதாகக் கூறினார்: துரை வைகோவைச் ‘சின்னப் பிள்ளை’ என விவரித்த கே.என்.நேரு!

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ குறித்துப் பேச விருப்பமில்லை என்றும், அவர் ஒரு சின்னப் பிள்ளை போல மிகவும் அதிகமாகப் பேசி வருவதாகவும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

‘எங்க அப்பா கோபக்காரர்; கொஞ்ச நாள் பொறுங்கள், என்னால் தனியாகக் கட்சி நடத்த முடியாது, நான் திமுக உடன் வந்து விடுகிறேன்’ எனக் கூறியவர் தான் இந்த துரை வைகோ என்று சாடிய அமைச்சர் கே.என்.நேரு, அவரின் சமீபத்திய பேச்சுக்கள் முதிர்ச்சியற்ற முறையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் தலைவர்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் மேலோங்கி வரும் சூழலில், மதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான துரை வைகோவின் கடந்தகாலப் பேச்சுக்களையும் அவரது அரசியல் செயல்பாடுகளையும் குறிப்பிட்டு அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள இந்த காரசாரமான கருத்துக்கள், தற்போதைய தமிழக அரசியல் களத்திலும் கூட்டணிக் கணக்குகளிலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Leave a Comment