தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில், முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சி நிர்வாகத் துறையில் ரூ.45 லட்சத்திற்குப் பெரிய அளவில் டெண்டர் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னை பெருங்களத்தூர் ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட அசோகர் தூணை கடந்த ஜூலை 29-ஆம் தேதியன்று அமைச்சர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
ஆனால், ஜூலை மாதத்திலேயே திறந்து வைக்கப்பட்ட அந்தச் சிலைக்குப் பின்னதாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி ரூ.27 லட்சத்தில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்ட ஒரு திட்டத்திற்கு, அது முடிந்த பிறகு டெண்டர் கோருவது முற்றிலும் விதிகளுக்குப் புறம்பானது என்றும், இதன் பின்னணியில் மிகப்பெரிய நிதி முறைகேடு ஒளிந்திருப்பதாகவும் அவ்வமைப்பு சாடியுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றுள்ள இந்த டெண்டர் முறைகேடுகள் மற்றும் முறையற்ற அரசாணைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
முதல்வர் கையிருப்பில் உள்ள முக்கியத் துறையிலேயே, திறக்கப்பட்ட திட்டத்திற்குப் பின் தேதியிட்டு டெண்டர் கோரப்பட்டதாக வெளியாகி உள்ள இந்த அதிரடிப் புகார், தமிழக அரசியல் களம் மற்றும் அரசு நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.