விநாயகரை வழிபட்ட இஸ்லாமியர்கள்: வடசென்னையில் நெகிழ்ச்சியூட்டிய மதநல்லிணக்க நிகழ்வு!

வடசென்னை தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை விசர்ஜன ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு முன்பாக, பர்மா தமிழ் ஜமாஅத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையை ஊர்வலமாகக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய ஜமாஅத் நிர்வாகிகள் திரண்டு வந்து, முறைப்படி தேங்காய் உடைத்து விநாயகரை வழிபட்டு ஊர்வலத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்றனர்.

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு வளையத்திற்கு மத்தியில் நடைபெற்ற இந்நடவடிக்கை, தண்டையார்பேட்டை பகுதி மக்களிடையே மதங்களைக் கடந்து பரஸ்பர அன்பையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் உன்னதமான மதநல்லிணக்க நிகழ்வாக அமைந்தது.

சமீபகாலமாக எழும் சமூகப் பதற்றங்களுக்கு இடையே, வடசென்னையில் நடந்த இந்த மதநல்லிணக்க ஊர்வலத் தொடக்கம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

சமூக ஒற்றுமைக்குச் சான்றாக அமைந்த இச்சம்பவம், அப்பகுதியில் அமைதியான முறையில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெறவும் முக்கியக் காரணமாக விளங்கியது

Leave a Comment