ஈரானுக்குச் செல்ல வேண்டாம்: குடிமக்களை உடனடியாக வெளியேற அமெரிக்கா அவசர எச்சரிக்கை!

மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்து நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் தீவிரமான சூழலில், ஈரானுக்கு எந்தக் காரணத்துக்காகவும் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கா தனது குடிமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்துடன், தற்போது ஈரானில் தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் எவ்விதத் தாமதமுமின்றி உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ராணுவ மோதல்கள் மற்றும் தாக்குதல் அச்சுறுத்தல்கள் பெருமளவில் உச்சமடைந்துள்ளதைத் தொடர்ந்து, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே இந்த தீவிர எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பில் பெரும் சவால்கள் நிலவி வரும் நிலையில், நிலைமை மேலும் கைமீறிப்போகும் முன்பாக வணிக ரீதியிலான போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரானை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த போர்ச் சூழலும், அமெரிக்காவின் இந்தத் திடீர் அதிரடிப் எச்சரிக்கை அறிவிப்பும் சர்வதேச அரங்கில் பெரும் கொந்தளிப்பையும், உலக நாடுகளிடையே தீவிர பாதுகாப்பு கவலைகளையும் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment