தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகத் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகப் பொதுமக்கள் மத்தியிலிருந்து அடுத்தடுத்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தொடர் மின் தொடரமைப்பு கழக அலுவலகத்திற்குச் சென்று முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மின் தடையின் போது மேற்கொள்ளப்படும் உடனடி சீரமைப்பு நடவடிக்கைகள், மின் விநியோகக் கண்காணிப்பு முறைகள் மற்றும் தற்போதைய தொழினுட்பப் பணிகள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
மாநிலம் முழுவதும் மின் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வரும் சூழலில், கள நிலவரத்தைக் நேரில் சென்று ஆய்வு செய்யும் நோக்கில் முதலமைச்சரே நேரடியாகத் துறை அலுவலகத்திற்கு விரைந்தது நிருவாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரங்களால் பராமரிப்புப் பணிகள் தள்ளிப்போனதே மின்வெட்டிற்குக் காரணம் என எரிசக்தித் துறை தரப்பில் சமாதானங்கள் கூறப்பட்டாலும், மின்சாரப் பிரச்சனை மக்களின் அன்றாட வாழ்க்கையையும் தொழில்துறையையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
வெறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்துவதோடு நின்றுவிடாமல், களமட்டத்தில் பழுது அடைந்துள்ள மின் உள்கட்டமைப்புகளையும் மின்மாற்றிகளையும் விரைந்து சீரமைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதை விட, தடையற்ற மின்சாரத்தை மக்களுக்குத் தடையின்றி வழங்குவதே தவெக அரசின் நிருவாகச் சீர்மைக்குச் சரியான சான்றாக அமையும். முதலமைச்சரின் இந்தத் திடீர் ஆய்வு, மின்சாரத் துறையில் நிலவும் அலட்சியப்போக்கை முடிவுக்குக் கொண்டுவந்து விநியோகத்தைச் சீரமைக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.