அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை இடையிலான ஒரு சுவாரஸ்யமான உரையாடல் குறித்த தகவல் தற்போது உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கூகுள் மேப்பில் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு ‘டிரம்ப் ஓஷன்’ (Trump Ocean) எனப் பெயர் சூட்ட முடியுமா என்று கூகுள் CEO சுந்தர் பிச்சையிடம் கேட்டபோது, அவர் அதற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து ‘நோ’ சொன்னதால், அட்லாண்டிக் பெருங்கடலுக்குத் தன் பெயரை வைக்கும் அந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்தத் திட்டத்தைக் கைவிட்ட டிரம்ப், அடுத்து ஒரு புதிய யோசனையை முன்வைத்துள்ளார். அதாவது, அட்லாண்டிக் பெருங்கடலுக்குப் பதிலாகப் பசிபிக் பெருங்கடலுக்கு ‘அமெரிக்கன் ஓஷன்’ (American Ocean) எனப் பெயர் வைக்கும் யோசனையை அவர் தற்போது தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப உலகிலும் சர்வதேச அரசியல் வட்டாரத்திலும் டிரம்ப்பின் இந்த யோசனையும், சுந்தர் பிச்சையின் இந்த அதிரடி மறுப்பும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.