கருத்து சொல்ல எதுவுமில்லை – நடிகர் தனுஷ் அரசியல் பிரவேசம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குத் தனது பாணியில் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.

அவர் பேசுகையில், “தனுஷ் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறது என்பது ஊடகங்களின் யூகங்களாகத் தான் உள்ளது.தனை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதால், அதன் மீது கருத்துச் சொல்ல இப்போது எதுவுமில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாடு அரசியலில் புதியதல்ல. நடிகர் விஜய் தான் முதன்முதலில் இதைத் தொடங்கி வைத்தார் என்றும் சொல்ல முடியாது.

திரைப்படக் கலைஞர்களுக்கு அல்லது கலை உலகத் தொடர்பு என்பது அரசியலில் தீவிரமாக உள்ளது. எனவே திரைத்துறையில் இருந்து நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதைப் புதிய வரவு எனப் பார்க்க முடியாது” என்று தெரிவித்தார்.

தமிழக அரசியலில் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கால்பதிப்பது என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒன்றுதான் என்றும், அதை ஒரு புதிய அல்லது ஆச்சரியமான நிகழ்வாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

தனுஷ் தரப்பிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை, இது வெறும் ஊடக யூகமே என்று திருமாவளவன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Comment