2.5 லட்சம் மரங்களை அழித்த GOOGLE! AI டேட்டா சென்டருக்காக ஃபின்லாந்தில் பெரும் அதிர்ச்சி!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம், ஃபின்லாந்தில் புதிய AI டேட்டா சென்டர் அமைப்பதற்காகச் சுமார் 2.5 லட்சம் மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஃபின்லாந்தின் முஹோஸ் (Muhos) உள்ளிட்ட பகுதிகளில் இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்பான பல்வேறு விதிமீறல் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, இந்த டேட்டா சென்டர் பணிகளை உடனடியாக நிறுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு பெரிய அளவில் மரங்கள் வெட்டப்பட்டதால் தங்களின் பகுதியில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் இந்தச் சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபுறம் அவசியமாக இருந்தாலும், அதற்காக இயற்கையையும் சுற்றுச்சூழலையும் இந்த அளவுக்கு அழிப்பதை ஏற்க முடியாது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment