சென்னை விமான நிலையத்தில் விமான எரிபொருள் (Aviation Turbine Fuel) மீதான வாட் வரியை 29 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாகக் குறைத்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த முக்கிய வரி குறைப்பு வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
தமிழக அரசின் இந்த முற்போக்கான நடவடிக்கையை வரவேற்றுள்ள முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo), இதற்காக நடவடிக்கை எடுத்த முதல்வர் விஜய்க்குத் தங்களது பாராட்டுக்களையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த வரி குறைப்பு நடவடிக்கை விமானப் போக்குவரத்துச் சந்தையை விரிவுபடுத்தவும், மாநிலத்தின் சுற்றுலாத் துறை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு விமான நிறுவனங்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், இந்த வாட் வரி குறைப்பால் சாதாரணப் பயணிகளுக்கான விமானக் கட்டணம் குறையுமா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், அரசின் இந்த நடவடிக்கை தமிழகப் பொருளாதாரத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.