ஃபிலைதுபாய் விமானத்தில் நிகழவிருந்த பயங்கரவாதச் செயலைத் தன் துணிச்சலான செயலால் தடுத்து நிறுத்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) உயரிய விருதைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார். துபாய் இளவரசர் ஷெக் ஹம்தான் நேரில் அழைத்து இவருக்கு இந்த உயரிய விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு வழங்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது “முதல் வகுப்பு சைத் 2” என அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஆபத்தான சூழலில் நொடியில் அவர் எடுத்த துணிச்சலான முடிவும், அவரின் சாதுர்யமான செயல்பாடும் பல உயிர்களைப் பாதுகாக்க உதவின.
இந்தக் கவுரவம் இந்திய விமானிகளுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய பெருமையைத் தேடித்தந்துள்ளது. இவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி உலகெங்கிலும் உள்ள பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.