கைதிகள் தப்பினால் சுட்டுப் பிடிக்கலாம் – டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி நடவடிக்கை!

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் மேலும் பலப்படுத்தும் நோக்கில் சிறைத்துறை பல முக்கிய மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறையில் இருந்து கைதிகள் யாரேனும் தப்பி ஓடினால், சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களைச் சுட்டுப் பிடிக்கலாம் என்று சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்துச் சிறைகளின் கண்காணிப்புக் கோபுரங்களிலும் (watch towers) துப்பாக்கி ஏந்திய போலீசார் உடனடியாகப் பணியமர்த்தப்பட்டு தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறை வளாகங்களுக்குள் இருந்து கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்கவும், சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை மேலும் பலப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைப் பாதுகாப்பைக் கடுமையாக்கும் நோக்கில் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி உத்தரவு, சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தீவிர நடவடிக்கையின் மூலம் சிறைகளில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்படும் என்றும், இதனால் அரசியல் வட்டாரங்களில் எழும் வீண் விவாதங்களும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment