ரூ.30 கோடி பேரம்! தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க அதிமுகவினர் ரூ.30 கோடி பேரம் பேசினர்- தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா அதிரடி குற்றச்சாட்டு!

தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்லையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு பகீர் தகவலை தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா வெளியிட்டுள்ளார். தவெக அரசுக்கு எதிராக வாக்களிப்பதற்காக அதிமுகவினர் தன்னிடம் ரூ.30 கோடி பேரம் பேசியதாக அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாகக் கட்சியின் உயர்மட்டத் தலைமையிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்.எல்.ஏ. முஸ்தபா, அரசியல் களத்தில் நடக்கும் இத்தகைய குதிரை பேர முயற்சிகளை வெளிச்சம்போட்டுக் காட்டினார். ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காகப் பெருமளவில் பணம் கொடுத்து விலைபேசும் செயல்களில் எதிர்க் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் அதிமுகவினர் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்துக் கட்சியின் தலைமைக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து முறையான புகாரை அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

முஸ்தபாவின் இந்த அதிரடியான குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தீயைப் பற்றவைத்துள்ளதுடன், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடுமையான வார்த்தைப் போரையும் உருவாக்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment