மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் மீனாட்சி உள்பட 2 பேர் கைது!

சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் மீனாட்சி மற்றும் யூடியூபர் நிஷாந்த் ஆகியோர் மதுரை தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் தங்களை பிரபலங்களாக காட்டி வந்த இவர்கள், இந்த துணிகரக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி மற்றும் யூடியூபர் நிஷாந்த் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி மீனாட்சி உட்பட இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுதொடர்பான சிசிடிவி மற்றும் இதர கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. சமூக வலைதளப் பிரபலங்களே கைதான இந்தச் செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Comment