கள்ளக்குறிச்சியில் நவம்பர் 17-ல் அதிமுக போராட்டம்: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் வரும் நவம்பர் 17-ம் தேதி அதிமுக சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த பெரும் சர்ச்சை மற்றும் குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் கூறி அதிமுக தீவிர கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும், “அதற்குள் கைது செய்…!” என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிராக நடந்துள்ள இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

Leave a Comment