இந்தியாவின் 57-வது சர்வதேச திரைப்பட விழாவான IFFI-ல், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: எ லெஜெண்ட் சாப்டர் 1’ வணிகத் திரைப்படப் பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.
கோவாவில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் இடம்பெற்றுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும், இந்தத் திரைப்பட விழாவின் இந்திய பனோரமா பிரிவில், 25 முழுநீளத் திரைப்படங்கள், 20 ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் என மொத்தம் 45 படங்கள் திரையிடப்படவுள்ளன.
‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் இந்த சாதனைப் பயணம், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளதுடன், படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. தேசிய அளவில் இப்படத்திற்குக் கிடைக்கும் இந்த பெருமை இந்திய சினிமாவுக்கு மேலும் சிறப்பைத் சேர்த்துள்ளது.