நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இடையேயான பிணைப்பு குறித்து மூத்த நடிகை குட்டி பத்மினி கடந்த காலத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அப்பேட்டியில் பேசிய அவர், “உண்மையில் விஜய், த்ரிஷா இருவருக்குள் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெளிவாகத் தெரியாது.
‘கில்லி’ திரைப்படத்தில் நடித்த சமயத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் இருவரும் மனதார நேசிச்சாங்க. அதை விஜய்யின் தந்தை சந்திரசேகர் சார் தீவிரமாக எதிர்த்தாரு” என்று தனக்குத் தெரிந்த பின்னணி விவரங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
அதேவேளையில், பரவி வரும் வதந்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், “ஆனால் விஜய் சார் அவருடைய மனைவியைப் பிரிவதற்கு த்ரிஷா தான் காரணம் என்று சொன்னால் அதை நான் ஒருபோதும் ஒத்துக்க மாட்டேன்!” என்றும் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
திரை உலகில் ஹிட் ஜோடியாக வலம் வந்த விஜய் – த்ரிஷா காம்பினேஷன் குறித்துப் பல வருடங்களாகப் பல்வேறு செய்திகள் வெளியாகி வந்த நிலையில், மூத்த நடிகை குட்டி பத்மினியின் இந்த பழைய பேட்டி வீடியோ தற்போது மீண்டும் வெளிவந்து சமூக வலைத்தளங்களிலும் சினிமா ரசிகர்களிடையேயும் காரசாரமான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.