“மேகதாது தமிழகத்திற்கு அவசியம்!”: தென் மண்டல கவுன்சில் மாநாட்டில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சு!

சென்னையில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணைக் திட்டம் குறித்துப் பேசி மீண்டும் காவிரி நதிநீர் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அண கட்டப்படுவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களுமே பெரும் பலனைடயும் என்று அவர் தனது உரையின் போது சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், மேகதாது அணைத் திட்டம் கர்நாடகாவிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கும் மிகவும் அவசியமான மற்றும் முக்கியமான திட்டம் எனத் தெரிவித்தார்.

உபரி நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுத்து, வறட்சி காலங்களில் இரு மாநிலங்களுக்கும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த அணை உதவும் என அவர் வாதிட்டார். மேலும், தமிழகத்திற்கு உதவவும், இரு மாநிலங்களின் நலனைக் காக்கவும் கர்நாடக அரசு மேற்கொள்ளும் இந்த திட்டத்திற்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் நேரில் கேட்டுக்கொண்டார்.

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான எதிர்ப்பிற்கு இடையேயும், சென்னையில் நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மேகதாது அணை குறித்துப் பேசியுள்ளது அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.

Leave a Comment