சொத்து தகராறு: சகோதரி ராதாவுக்கு எதிராக நடிகை அம்பிகா பரபரப்பு புகார் – காவல் நிலையத்தில் CSR பதிவு!

பிரபல மூத்த நடிகை அம்பிகா தனது சகோதரியும் நடிகையுமான ராதாவுக்கு எதிராக அளித்துள்ள புகார் தொடர்பாக, மதுரவாயல் காவல் நிலையத்தில் CSR பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொத்து மற்றும் தொழில் தொடர்பான பிரச்சனைகளில் ராதா தரப்பில் வழங்கப்பட்ட 5 காசோலைகள் (Cheques) முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அம்பிகா குற்றம் சாட்டியுள்ளார்.

ARS சொத்தில் 50 சென்ட் நிலப் பங்கு, ARS Gardens Studio-வில் 3-ல் 1 பங்கு மற்றும் 1,299 கிராம் தங்கம் ஆகியவை தொடர்பாக ராதா தரப்புக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அம்பிகா முன்வைத்துள்ளார்.

மேலும், கேரளாவிலும் ராதாவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு நிலுவையில் உள்ள வழக்குகளைத் திட்டமிட்டு மறைத்துச் சமரசம் பெற முயற்சிப்பதாகவும் அம்பிகா தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரையுலகில் 80-களின் முன்னணி நட்சத்திரச் சகோதரிகளாகக் கோலோச்சிய அம்பிகா – ராதா இடையே உருவெடுத்துள்ள இந்த இமாலய சொத்துப் பிரச்சனை மற்றும் சட்டப் போராட்டம் திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், ஸ்டுடியோ பங்குகள் மற்றும் பெருமளவிலான தங்க நகைகள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், காவல் துறையினர் இரு தரப்பு ஆவணங்களையும் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப ரீதியான சொத்துப் பகிர்வில் எழுந்துள்ள இந்த முரண்பாடுகள் நீதிமன்ற விசாரணைக்கு நகருமா அல்லது காவல்துறை நிலையிலேயே சுமூக முடிவுக்கு வருமா என்பது அடுத்து வரும் நாட்களின் விசாரணையிலேயே தெரியவரும்.

Leave a Comment