எரிக்கப்பட்ட கரப்பான்பூச்சி உருவபொம்மை! – டெல்லியில் நடந்த வித்தியாசமான தசரா திருவிழா!

டெல்லியில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக நடைபெறும் தசரா திருவிழாவில், வழக்கமாக எரிக்கப்படும் ராவணன் மற்றும் கும்பகர்ணன் உருவபொம்மைகளுடன் சேர்த்து, முற்றிலும் வித்தியாசமான முயற்சியாக 30 அடி உயர கரப்பான்பூச்சி உருவபொம்மையும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது. இந்த வினோதமான கரப்பான்பூச்சி பொம்மை திருவிழாவிற்கு வந்த பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழாவின் போது தீய சக்திகளின் அழிவைக் குறிக்கும் வகையில் ராவணன் மற்றும் அவர்தம் உறவினர்களின் உருவபொம்மைகளை எரிப்பது வழக்கமான ஒன்றாகும். ஆனால், இந்த முறை அந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டு, ஒரு பெரிய கரப்பான்பூச்சி உருவபொமையை 30 அடி உயரத்தில் உருவாக்கி அதை எரித்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இந்த வித்தியாசமான முயற்சி தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விழாவிற்கு வந்திருந்த மக்கள் இந்த கரப்பான்பூச்சி பொம்மை எரிப்பைப் பார்த்து ஆச்சரியத்துடன் ரசித்ததுடன், இது தொடர்பான வினோதமான நிகழ்வை ஆர்வத்துடன் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். டெல்லியில் இந்த ஆண்டு நடைபெற்ற தசரா திருவிழாவில் இந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Comment