தமிழ்நாட்டில் தொழில் வளங்களை மேம்படுத்தவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு பல்வேறு முன்னணித் தனியார் நிறுவனங்களோடு வெற்றிகரமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுப் பயணத்தின் மூலம் ரூ. 15,300 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் மிகப்பெரிய முதலீட்டு திட்டங்களைக் கொண்டு வந்த முதலமைச்சர் விஜய்க்குச் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் மற்றும் தவெக வழக்கறிஞர் பழ.கார்த்திக் ஆகியோர் தங்களது மனம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
தொழில் துறை வளர்ச்சியை வேகப்படுத்தி இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவை நனவாக்கும் விதமாக அமைந்துலை இந்த ஒப்பந்தங்கள், தவெக அரசின் பொருளாதார நிர்வாகத் திறனுக்குக் கிடைத்த சான்றாகப் பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிகளின் பல்வேறு அரசியல் விமர்சனங்களுக்கு இடையே, லண்டன் பயணத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி பிரம்மாண்ட முதலீடுகளை ஈர்த்து சாதனை படைத்துள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த வெற்றிப் பயணம், அரசியல் மற்றும் தொழில் துறை வட்டாரங்களில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.