“நாளை PM நீங்கள் தான்!”: முதல்வர் விஜய்யைச் சட்டப்பேரவையில் புகழ்ந்து தள்ளிய அமைச்சர் சரத்!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் மனிதவள மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் சரத், முதல்வர் விஜய்யை மிக நேர்த்தியாகவும் அடுக்குமொழியிலும் புகழ்ந்து பேசி அவையின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தனது உரையின் போது முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமை மற்றும் மக்கள் நலப் பணிகளைப் வெகுவாகப் பாராட்டிய அவர், சட்டமன்றப் பேரவையில் உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகளால் தனது புகழாரத்தைச் சூட்டினார்.

பேரவையில் உரை நிகழ்த்திய அமைச்சர் சரத், “எங்கள் இதயத்திலும் கோட்டையிலும் CM ஆக இருக்கும் எங்கள் தலைவா… நாளைய பாரதத்தின் PM நீங்கள் தான்! AM PM பார்க்காமல் இரவு பகலாக உழைக்கும் எங்கள் CM, நாளைய PM நீங்கள் தான்!” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

முதல்வர் விஜய் புன்னகையுடனும் அமைதியாகவும் இந்த உரையைச் செவிமடுத்த நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பலத்த கைதட்டலையும் உற்சாகத்தையும் கிளப்பியது.

மக்களுக்காகவும் மாநிலத்தின் வளர்ச்சிளுக்காகவும் இடைவிடாது உழைக்கும் முதல்வர் விஜய்யின் தலைமைத்துவத்திற்குத் தேசிய அளவிலான அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே அமைச்சர் சரத் இவ்வாறு பேசியதாகத் தெரிகிறது. சட்டமன்றத்தில் அமைச்சர் சரத் தெரிவித்த இந்த சுவாரஸ்யமான பஞ்ச் பேச்சும், அதைத் தொடர்ந்து எழுந்த பேரவை உறுப்பினர்களின் ஆரவாரமும் தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் வைரலாகப் பரவி வருகிறது.

Leave a Comment