“அன்பும் அறமும் தழைத்தோங்கட்டும்!”: மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் – முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சி வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாள் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பகவான் கிருஷ்ணரின் போதனைகளை நினைவுகூர்ந்த அவர், “கிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்” என்றும் தனது செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

சமூகத்தில் அமைதியும், சகோதரத்துவமும், நல்வாழ்வும் பெருக வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள இந்தக் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துச் செய்தி, பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Comment