லண்டன் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பியுள்ளார்; அவர் பயணித்த எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் சற்று முன் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கியது.
அரசு சார்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட பயணத் திட்டங்களை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பியுள்ள முதலமைச்சருக்கு, விமான நிலைய வளாகத்தில் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
லண்டன் பயணத்தின் போது சர்வதேச அளவிலான பல்வேறு முக்கியக் சந்திப்புகள் மற்றும் அரசுசார்ந்த ஆலோசனைகளில் அவர் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கியச் சாலைப் பகுதிகளில் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
விமான நிலையத்தில் தரையிறங்கியதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து வரவேற்பு அளித்தனர். லண்டன் பயணத்தை நிறைவு செய்து முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பியுள்ள செய்தி, தமிழக அரசியல் களம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் கவனத்தையும் பெற்றுள்ளது