“என் மேஜையில் இருக்கிறது!”: சட்டமன்றத்தில் 3 துறை கோப்புகள் குறித்து முதல்வர் விஜய் அதிரடி உரை!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் மிகவும் காரசாரமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். பேரவையில் உரையாற்றிய அவர், “ஒரு வாரம் முன் நிதியமைச்சர் 3 துறையை ஆராய்ந்து அதன் கோப்புகள் என்னுடைய மேஜையில் தான் இருக்கிறது என்று கூறினார். அவர் ஏதோ போகிற போக்கில் அந்த வார்த்தைகளைச் சொல்லிவிடவில்லை” எனத் தொடங்கித் தன் பேச்சை அதிரடியாக முன்னெடுத்தார்.

தொடர்ந்து அவையில் காரசாரமாகப் பேசிய முதலமைச்சர் விஜய், “அவை உண்மையில் என்னுடைய மேஜையில் தான் உள்ளன; அத்தனையும் முறையான ஆதாரத்தோடு உள்ளன. அதை இப்போது கட்டாயப்படுத்தி ஓப்பன் பண்ண வச்சுராதீங்க, எதை எப்போ ஓப்பன் பண்ணணுமோ, அப்போ அது கண்டிப்பாக ஓப்பன் ஆகும்” என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார். அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய விமர்சனங்களுக்கு இந்த அதிரடி பதில் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடியான உரை, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. 3 முக்கியத் துறைகளின் கோப்புகள் முழு ஆதாரங்களுடன் தன்வசம் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருப்பது, தமிழக அரசியலில் அடுத்தகட்டமாகப் பெரிய விவாதப் பொருளாகவும் மாற்றமாகவும் உருவெടുக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment