தமிழக சட்டமன்றத்தில் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் சொற்போர்களும் காரசாரமான விவாதங்களும் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் சமீபத்திய பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள காட்டமான அறிக்கை அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “தனக்கு மூன்று முக்கிய Files வந்திருப்பதாகவும், அதை ஓபன் பண்ண வச்சிடாதீங்க” என்றும் எச்சரிக்கும் பாணியில் குறிப்பிட்டிருந்தார். முதலமைச்சரின் இந்த பேச்சைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தைரியம் இருந்தால் அந்த ஃபைல்களை உடனடியாக Open பண்ணி காட்டுங்கள்” என்று பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், “இந்த முதலமைச்சருக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும் என நினைத்தேன்; ஆனால் ஒரு நாளும் ஃபைலை ஓபன் பண்ண மாட்டேன்கிறார்” என மிகவும் கடுமையான சொற்களால் சாடியுள்ளார்.
சட்டமன்றத்தில் வெறும் மிரட்டல் தொனியிலான வார்த்தைகளைப் பேசுவதை விட்டுவிட்டு, உண்மையிலேயே ஆதாரங்கள் இருந்தால் அவற்றை மக்கள் முன் தைரியமாக வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் பேச்சுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்த அதிரடித் தாக்குதல் மற்றும் காரசாரமான விமர்சனம், தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.