ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்று மிகக் காரசாரமான மற்றும் உறுதியான உரையை நிகழ்த்தியுள்ளார். இவரது இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றாக இணைந்து, ஒன்றுபட்டு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.
பயங்கரவாதத்திற்கு எந்தவொரு வடிவத்திலும் புகலிடமோ அல்லது ஆதரவோ அளிக்கக் கூடாது என்றும், அதை எதிர்கொள்வதில் சர்வதேச அளவில் கூட்டு ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இந்த அதிரடியான பேச்சு, சர்வதேச அரசியல் களத்திலும் ஊடகங்கள் மத்தியிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்து வரும் தெளிவான நிலைப்ப்பாட்டை இந்த உரை மீண்டும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.