எலி வேட்டைக்கு போகமாட்டான்: வள்ளுவர் கோட்டக் கூட்டத்தில் துரை வைகோ ஆவேசம்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தனது அரசியல் எதிரிகளுக்கு சாடும் வகையில் மிகக் காரசாரமாகப் பேசினார். மேடையில் உரையாற்றிய அவர், “சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் நான் மகாகவி பாரதியாரின் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசினேன்.

ஆனால், ஏதோ சில நபர்களைத் தான் நான் குற்றம்சாட்டிப் பேசியதாக சிலர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். வைகோவின் மகன் எப்போதும் எலி வேட்டைக்குப் போகமாட்டான், என்றும் புலி வேட்டைக்குத் தான் போவான் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று மிக ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும், “அந்தப் புகழ்பெற்ற கவிதையை நான் மீண்டும் இங்குச் சொல்கிறேன்… ‘பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ…’. இதில் உறுதியாகச் சொல்கிறேன், நான் வீழவில்லை, நீங்கள் வீழவில்லை; வீழ்ந்தது தீய சக்தி, வீழ்ந்தது ஊழல் சக்தி!” என்று முழங்கினார்.

விமர்சனங்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மகாகவி பாரதியாரின் வரிகளைத் துணைக்கழைத்து துரை வைகோ ஆற்றிய இந்த அக்னிப் பேச்சு, அங்கு கூடியிருந்த கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் பலத்த கரகோஷத்தையும் ஏற்படுத்தியது.

அரசியல் களத்தில் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்குத் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ள அவரது இந்த உரை, தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment